Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Friday, March 16, 2018

A poetic in reply to my dad’s

வங்கத்து பொன்னாடையெல்லாம் வக்கற்ற மண்ணார்க்கணிந்து
தென்னகத்து சங்கமெல்லாம் பெருமித்து சீரழிய
இலக்கணமறியா கவினான் அதனால் தலைக்கனம் எனக்கில்லை
சொல்வேன் - சிங்கமே நீ

சில காலமாய் தமிழ் வேட்டையெல்லாம்
உன் வீட்டு பெண்டிருக்கே விட்டு
கிடைக்கும் புகழில் மட்டும்
பெருமுதல் பங்கு கேட்டபதாலோ

இருந்தும் தந்தையிடம் பயின்ற வித்தன்றோ
அதனால் நரி என்றாலும் நாயினமே
நன்றியுடன் தொந்திகொண்டப்பனாய்
உனக்கே முதர்வணக்கம்


*This was a silly game of words that my dad and I were playing a while ago and he teased me for my poor poetry - I started writing in Tamil because I was inspired by his writing prowess.  This was my comeback to him.  Can't recall what he initially wrote it had me calling a little fox somewhere.  :) I just noticed this in my drafts and thought to share...


Monday, May 16, 2016

குடல் கொடுமை, உருளை வதை!!

மெலிதான உன் தேகத்தை கையிலெடுக்க
உன் உவர்ப்பை என் உதட்டில் ருசிக்க
சிறிதாய் கடித்திட பொறுமையின்றி
                             முழுதாய் விழுங்கிட
தனியாய் அமர்ந்து பார்க்கும் என் பகல் வேலை
                             கார் கால ஏக்கமாய் மாற
குடல் காணும் கனவில் ஆழ்கிறேன்
என் அன்பு உருளை கிழங்கு வத்தலே!!




கறுமுறுவென கடித்த்துண்ண
மேலிதுரு கொண்ட உனைத்தேடி
சுடும் சுகம் கொண்ட பகல் கனவில்
ஆழ்திடச் செய்யும் ஒரு நிலையாய்
கடும் அடம் கொண்டிருக்கும்
என் குடல் செய்யும் இந்தக் கொடுமையில்
                                நான் எல்லை மீற
தொட்டில் இன்றி கட்டில் இன்றி
குழந்தையாய் பிறந்ததாம் - இந்த ஊளச்ச்சதை!

Wednesday, April 06, 2016

ஆசையா காமமா?

நீ உன் முகமயிற் நீக்கினால்
என் முகம் ஏக்கமாய் வாடியது...
இது பிள்ளை ஆசையா, செல்லக் காமமா?

Monday, May 25, 2015

விட்டில் பூச்சியின் வாழ்க்கை விளங்கியது...!



Vittil poochiyin vazhkai vilangiyathu...
Muzhu nilavu kandu nan kannagatradu mind ra bodu.

Adan vazhkai enadanadu,
Unai kandu nerungiyathilirundu!

Ennai erikkum oliyum enai eerkkum visaiyum neeyagi poivittai... 

Tuesday, June 11, 2013

தவறு செய்யத்தூண்டும்

மறுமுறை தவறு செய்யத்தூண்டும் உன் மன்னிப்பு முத்தங்கள்...


Tuesday, January 22, 2013

ஆங்கிலத்தூசுப்படிந்து


நீலக்கடலாம் வானம் அதன் அழகு தேக்கும் கடற்கரை மணலாம் சேர்ந்துநிறக்கும் சீர்மேகம்...
இவை இருந்தும் நல்லதொரு கவிதைத் தொடுக்கவில்லை...

ஒற்றை மரம் ஒன்று போதிக்கக்காத்திருந்தும், செவிமடுக்க அங்கொரு புத்தனில்லாதது போல் -
கற்பனைகள் தீர்ந்துபோன வெள்ளைக்காகிதக்குப்பையென என் பழைய கவிமனம் ...
காகிதங்கள் நிரப்பா... மரம்வெட்டா..., சீர்த்திருத்தமாய் மறியல் செய்யும் என் சொற்க்கூட்டம்...

பாரதியவன் தமிழ்நேசமும் அதை வாழவைக்கும் அவன் ஆசையும் சொன்னக்  கவிஞர் சிற்பியவரின் கரகோஷத்திற்குறிய கவிதைப்புத்தகம்...
                                                                                                      கைப்பைக்குள்... -      அது

தமிழ்மறியும் அவலத்தை அவர்கள் அழகாய்ச் சொன்னதை, வண்டியின் குலுங்கலில் மிதமாய் என் கையிடித்து குத்திக்காட்டியது...

பாரதியின் புதுமைப்பெண்ணாய் நான் பெருமைக்கொண்டிருந்தக் காலம் மாறுதல் கொண்டது சரி...

அவன் பாடல்கள் போலில்லாவிடிலும் தமிழ் ரசிக்கக்கூட வார்த்தைகள் வற்றிப்போன இந்தக்காலமும் நோக்கிட நேரிற்றே...

காதல் வந்ததில் சிலக்காலம் கவிதை அலைகள் அடித்துபுரண்டோடியது...
ஆனால் காலப்போக்கில் கண்ட வாழ்க்கைச்சஞ்சலங்களில் சாதல் கண்டதே என் இனியத்தமிழ்...

மீண்டும் பெருவேனோ அந்த முக்கனிக்காலங்கள், தமிழ்ப்பழகிய இளமைக்காலங்கள்...!?

யாதுமறியாத பண்ணிரண்டில் யாப்புமறியாது எழுதத்தொடங்கிய என் சின்னப்பிள்ளை மிட்டாய்த்தமிழ்...
மிடுக்காய் உடுத்தியப்பட்டுச்சொக்காய்ப்போல் சோக்காய் அணிந்து ஊர்வலம் வந்த என் செல்லத்தமிழ்...

மழலையாய் மலர்ந்த, பிழையிருந்தும் மாசில்லாத்தமிழ்...

                ஆங்கிலத்தூசுப்படிந்து மூலையில் ஒதுங்கிய என் பிள்ளைத்தமிழ்...

இப்பொழுது வெளுக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்...

                                                                                                                            வருவாயோ?

முழுத்தூய்மையுடன் இல்லாவிடிலும் எனை வளர்த்தத்தத்தாய்மையுடன்....
             
                                                                                                         என் தாய்த்தமிழே...!!!

Note: I wrote as usual on a bus ride back from my native that I was recently on a visit to.  The scenic dryness usually brings forth some thoughts and words as id this time but i realized how little I write both in terms of frequency as well as the quality.  To top it, as mentioned had just done with the book - பாரதி, கைதி எண் 253 - by kavignyar Sirpi an of course had elements of influence from there both in the content as well as the style.

Disclaimer:
"ஆங்கிலத்தூசுப்படிந்து" is not intended to belittle English as a language, but merely to say that it has so seeped into crevices of the mother tongue that we have forgotten a lot of Tamil words and only know the English counterparts for daily use.

Tuesday, November 24, 2009

Stranger in My Native Land...

Stranger in my native land...
Alien to the society that forms most of my country...
Scared among my own sibblings...
  -  To live and let live...

Am I a native, Am I foreign?


I wear strange clothes...
I speak a different tongue...
I live a different life...
I am completely different

To those people whose sweat mixes in my soil...
To the people that plough on, their lives on it...
To the people that float on its floods...
To the people that survive its drought...
To the people that starve in its famine...
To the people that struggle to be...
To the people that are - my country...


I am kind if I give them a seat...
I am generous if I share my food with them...
I am down to earth if I exchange niceties...
I am envied for what I am...

                       A foreigner in my own land...

I am pretty if I don't share their skin tone...
I am progressive if I defy their traditions...
I am independent if I am selfish about my dreams,
          which I build on their support and exclude any credit to them...
I am looked up to - if I am foreign...

I am  frightened to mingle with them...
I depise this struggle for life...
I pity their state of affairs...
I am disgusted at their very standard of life...
But Oh!, I am gentle when I "tolerate" it all for a while...



I pride in rattling along in their compartment
I find adventure in brushing shoulders with people like that....

Yes I am a national... But yes, I am foreign...

உன்னுடன் தோள்கள் உறசி உரையாடுவதில் பெருமை கொள்கிறேன்...
                                                  நான் எவ்வளவு பாகுபாடின்றி பழகுகிறேன்...
என் போல் ஒரு நிலையுள்ளவள் உன்னுடன் பழகுவதில்
                                    நீ வெகுளியாய் பெருமையில் புன்னைகைக்கிறாய்...
அந்தப் புன்னகை எனக்கு உண்மை உணர்த்தியது, நீ என் மண்ணின் மைந்தன்...
நான் வேற்று மண்ணிற்க்கு அடிமை...!!!
இதுவே இன்று எந்நாட்டின் இளைஞர் நிலை...


PS: Wrote it when returning to Bangalore from Hubli after a friend's wedding, on a Fast Passenger shuttle train between the two, courtesy a very thoughtful friend of mine.

There were throngs of people on the Reservation compartments (too!) that traveled clinging to each other and finding seats wherever possible for their two hour ride to a near by town.  The TTR, conveniently for them, checks performs his duty only after their station.  When asked about this, they said that they had tried all means from peaceful (bureaucratic) application processes to rallies and rages.  Nothing worked.  We did not get a chance to ask the TTR about this.  We concluded through "intelligent" discussions among the "literate" reservation passengers that it was probably not as simple as adding a couple more of 'unreserved' compartments, for may be after that station there might not be many 'unreserved' passengers taking the train.  Well, we were quite scared for our belongings and in one of those local stations when we could hear scuffles and a mob of people trying to solve some issue between a couple of guys, we were scared for our own safety too.  And then, naturally, one of us said, "enjoy the adventure, it's ok, when will we get to do something like this again"... The thrill of it gave me a jolt to reality... *SIGH*

Thursday, October 29, 2009

நான் உன்னைக் கொண்டேன்... I take to you...

கடல் காற்றைக்  கொள்வது போல், நான் உன்னைக் கொண்டேன்...
அலையாய் எழ, உன்னைத் தழுவி என்னுள் விழ...

Like the sea takes to the wind, I take to you...
To raise as waves, to embrace you and fall, back into me...

மணல் நீரைக் கொள்வது போல், நான்  உன்னைக் கொண்டேன்...
பண்பட, பருவப்பட,  உன்னைத் தழுவி உருதியடைந்திட...

Like the sand takes to water, I take to you...
To harden, mature, to embrace you and strengthen...

வானம் வண்ணம் கொள்வது போல், நான்  உன்னைக் கொண்டேன்...
நீ என்னில் படர்ந்திட,  உன்னைத் தழுவி, நான் உன்னில் கரைந்திட (நான் நீயாய் மாறிட/ உனக்கொரு ஊடகமாய் அமைந்திட)...

Like the sky takes to colours, I take to you...
For you to disperse in me, to embrace you, to become your medium for you to show...

தீக் காற்றைக் கொள்வது போல்,  நான்  உன்னைக் கொண்டேன்...
சுகமாய் எரிந்திட,  உன்னைத் தழுவி, நான் என்னை அழித்திட...

Like the fire takes to the air, I take to you...
To burn warmly, to embrace you and be destroyed...

மண் மழையைக் கொள்வது போல், நான்  உன்னைக் கொண்டேன்...
உன்னை என்னுள் பருகிட, உன்னைத் தழுவி, நான் உயிர்த்திட, உயிர் கொடுத்திட...

Like the earth takes to the rain, I take to you...
To drink you into me, to embrace you and come alive, to give life...

மனம் எண்ணம் கொள்வதுப் போல், நான்  உன்னைக் கொண்டேன்...
நீ என்னுள் இருப்பதாலே, நான் என்னை உணர்ந்திட, என்னுள்ளிருந்து நீ என்னை அரித்திட (அறித்திட)...

Like the mind takes to thoughts, I take to you...
For you are in me, I realize myself, Eroding, Itching me from within...

உடல் சுவாசம் கொள்வதுப் போல், நான்  உன்னைக் கொண்டேன்...
நீ என்னுள் கரைந்திட, உன்னைத் தழுவி, நான் உயிர்த் தாங்கிட, (நடத்திட)...
                                                                                             நீ இன்றி, நான் மடிந்திட...

Like the body takes to breathing (respiration), I take to you...
For you to dissolve in me... To embrace you and come to life... For without you, I die, I will not 'be'...

PS: Inspiration as I always say, is such a weird thing.  I was On the run again today morning and sat by a window and let the strong wind make my hair go wild.  As I did this, I was reminded of how crazy one of my closest friends was about "wind" ... And she being a cancerian, a water sign, loves the "wind"... that is how the first two lines come out and I stopped with the translation for it... But you know how it works... Sometimes it just goes on and on and I was furiously scribbling in a notebook in the bus that was giving me a good fight to keep my balance and write... With all these words buzzing I couldn't care about the inconvenience of the bus nor the few stares I was getting.  Early morning, with my hair all wild, furiously scribbling in a notebook... Don't blame them... :)

Thursday, September 24, 2009

on the run...

நல்லா ஓடிட்டு இருந்த வாழ்கையில ஓடவே ஓடாத நான், இப்போ ஓடவே ஓடாத வாழ்கையில தினம் ஓடறேன்...

ஆபீஸ் பஸ் பிடிக்க தினம் லேட் ஆ  எழுந்து கிளம்பி ஓடும்போது கடுப்புல வந்த தத்துவம்...


transliteration:
nalla odittu iruntha vaazhkayila odave odaatha nan, ippo odave odaatha vaazhkayila dinam odaren...

result of frustration: staying in a far away place from office, try getting late n runnig to catch the office bus... almost everyday!!!... :P

Thursday, August 27, 2009

Incomplete - 2

தனக்குள் சிரித்துக்கொண்டு, உதட்டைக்  கடித்துக்கொண்டு
         உலகமரியாது உணர்ச்சிகளை மறைத்துக்கொள்கிறேன்...

கொட்டும் மழையோசை... குளிரும் இளங்காற்று
         நான் மட்டும் அவ்வறையில்... புன்னகையுடன்...

காதலனை நினைத்து மகிழும் காவியங்கள் உண்டேனிலே
         காதலை காதலிப்போர்க்கு ஒன்று..........?!


Again somthing that I wrote long back...

N yet again a transliteration... atb sav and similar ones... ;P

Thanakkul siriththukkondu, udattaik kadiththuk kondu,
        ulagamariyadu unarchigalai maraiththuk kolgiren...

Kottum mazhaiyosai... kulirum ilangaatru...
       nan mattum avvaraiyil... punnagaiyudan...

Kadalanai ninaiththu magizhum kaaviyangal undenile
       kadalai kadalipporkku ondru.....?

Incomplete - 1

தன்னில் உருகும் தனிமையில் உருகும்
     இந்தப் பெண்ணின் மனமும் ஒரு பண்ணில் உருகும்
தனக்கென துணையொன்று வரும் தருணத்தை நோக்கி
      கண்ணில் கனவின் கனம் கண்ணீர்ப்பெருக்கும்
விண்ணில் நிலவும் மண்ணில் விழும் மழையும்
     என் என்னை நனைக்கும் பல எண்ணங்கள் கொடுக்கும் 

Just giving a try on my tamil blogging... This is something I wrote long back n that too incomplete... Hoping to blog more in tamil... Wish me luck... ;P

Hey sav, u had asked me to transliterate and thought ya so many of my tamil poem fans (lol!!) who do not know to read tamil script, will actually be benefited... ;P

Well, here goes:  All thebest...;P

Thannil urugum thanimayil urugum,
     Indap pennin  manamum oru pannil urugum...
Thanakkena thunaiyondru varum tharunaththai nuokki,
     kannil kanavin ganam, kanneerp perukkum...
Vinnil nilavum mannil vizhum mazhayum
    en ennai nanaikkum, pala ennangal kodukkum...