Tuesday, January 22, 2013

ஆங்கிலத்தூசுப்படிந்து


நீலக்கடலாம் வானம் அதன் அழகு தேக்கும் கடற்கரை மணலாம் சேர்ந்துநிறக்கும் சீர்மேகம்...
இவை இருந்தும் நல்லதொரு கவிதைத் தொடுக்கவில்லை...

ஒற்றை மரம் ஒன்று போதிக்கக்காத்திருந்தும், செவிமடுக்க அங்கொரு புத்தனில்லாதது போல் -
கற்பனைகள் தீர்ந்துபோன வெள்ளைக்காகிதக்குப்பையென என் பழைய கவிமனம் ...
காகிதங்கள் நிரப்பா... மரம்வெட்டா..., சீர்த்திருத்தமாய் மறியல் செய்யும் என் சொற்க்கூட்டம்...

பாரதியவன் தமிழ்நேசமும் அதை வாழவைக்கும் அவன் ஆசையும் சொன்னக்  கவிஞர் சிற்பியவரின் கரகோஷத்திற்குறிய கவிதைப்புத்தகம்...
                                                                                                      கைப்பைக்குள்... -      அது

தமிழ்மறியும் அவலத்தை அவர்கள் அழகாய்ச் சொன்னதை, வண்டியின் குலுங்கலில் மிதமாய் என் கையிடித்து குத்திக்காட்டியது...

பாரதியின் புதுமைப்பெண்ணாய் நான் பெருமைக்கொண்டிருந்தக் காலம் மாறுதல் கொண்டது சரி...

அவன் பாடல்கள் போலில்லாவிடிலும் தமிழ் ரசிக்கக்கூட வார்த்தைகள் வற்றிப்போன இந்தக்காலமும் நோக்கிட நேரிற்றே...

காதல் வந்ததில் சிலக்காலம் கவிதை அலைகள் அடித்துபுரண்டோடியது...
ஆனால் காலப்போக்கில் கண்ட வாழ்க்கைச்சஞ்சலங்களில் சாதல் கண்டதே என் இனியத்தமிழ்...

மீண்டும் பெருவேனோ அந்த முக்கனிக்காலங்கள், தமிழ்ப்பழகிய இளமைக்காலங்கள்...!?

யாதுமறியாத பண்ணிரண்டில் யாப்புமறியாது எழுதத்தொடங்கிய என் சின்னப்பிள்ளை மிட்டாய்த்தமிழ்...
மிடுக்காய் உடுத்தியப்பட்டுச்சொக்காய்ப்போல் சோக்காய் அணிந்து ஊர்வலம் வந்த என் செல்லத்தமிழ்...

மழலையாய் மலர்ந்த, பிழையிருந்தும் மாசில்லாத்தமிழ்...

                ஆங்கிலத்தூசுப்படிந்து மூலையில் ஒதுங்கிய என் பிள்ளைத்தமிழ்...

இப்பொழுது வெளுக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்...

                                                                                                                            வருவாயோ?

முழுத்தூய்மையுடன் இல்லாவிடிலும் எனை வளர்த்தத்தத்தாய்மையுடன்....
             
                                                                                                         என் தாய்த்தமிழே...!!!

Note: I wrote as usual on a bus ride back from my native that I was recently on a visit to.  The scenic dryness usually brings forth some thoughts and words as id this time but i realized how little I write both in terms of frequency as well as the quality.  To top it, as mentioned had just done with the book - பாரதி, கைதி எண் 253 - by kavignyar Sirpi an of course had elements of influence from there both in the content as well as the style.

Disclaimer:
"ஆங்கிலத்தூசுப்படிந்து" is not intended to belittle English as a language, but merely to say that it has so seeped into crevices of the mother tongue that we have forgotten a lot of Tamil words and only know the English counterparts for daily use.